சென்னை ஜூலை, 7
இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. முதலாவது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த உத்வேகத்தோடு தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதே நேரத்தில் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா, சாவா போராட்டமாகும். இதில் தோற்றால் தொடரை இழக்க வேண்டி வரும் என்பதால் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.