ஹைதராபாத் ஜூன், 24
ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜுனாவை காண வந்த வயதான ரசிகரை பாதுகாவலர் கீழே தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி நடந்திருக்கக் கூடாது எனவும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.