ஜூன், 24
உலகின் தலைசிறந்த வீரர்களில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வருண் ஆரோன் கூறியுள்ளார். ஐபிஎல்லில் ஃபார்ம் இல்லை, பந்து வீச்சில் ஜொலிக்கவில்லை என உலக கோப்பைக்கு முன்பு ஹர்திக் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டதாக கூறினார். இருப்பினும் டி20 உலக கோப்பையில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக புகழ்ந்துள்ளார்.