கள்ளக்குறிச்சி ஜூன், 23
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57ஐ கடந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்