விழுப்புரம் ஜூன், 19
விக்ரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்க வேண்டுமென்றால் அங்கு முகாமிட்டுள்ள ஒன்பது அமைச்சர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணி பொறுப்பாளர் பாலு அளித்த மனுவில், எக்காரணத்தை கொண்டும் தேர்தல் ஆணையம் அமைச்சர்கள் தங்கி பணியாற்றுவது அனுமதிக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.