சென்னை ஜூன், 19
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க பெய்தது. இதனால் எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சோளிங்கநல்லூர் என நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.