விழுப்புரம் ஜூன், 18
விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் பாமகவுக்கு இந்த கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். அத்துடன் அக்கட்சியின் சார்பில் 100 நிர்வாகிகள் அந்த தொகுதியில் தேர்தல் களப்பணி ஆற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.