குஜராத் ஜூன், 15
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள் மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதை தேசிய தேர்வு முகமை மறுத்து இருந்தது. இந்நிலையில் தேர்வில் முறைகேடு செய்ய உதவியதாக ஐந்து பேரை குஜராத் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.