இமாச்சலம் ஜூன், 15
இமாச்சலப் பிரதேசம் நாட்டின் குளிர் பிரதேசமான இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் ஹமீர்க் கபூர் மாவட்டத்தில் உள்ள நேரி நகரில் நேற்று 113.9 டிகிரி வெப்பம் பதிவானது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை என மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தலைநகர் சிம்லாவில் 87.8 டிகிரி வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.