கேரளா ஜூன், 14
குவைத் நாட்டில் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கொண்டுவர இந்திய விமானப்படையின் விமானம் குவைத் சென்றது. இந்நிலையில் ஏழு தமிழர்கள் உட்பட 45 பேரின் உடல்கள் இன்று காலை கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டுவரப்படுகின்றன. இதில் 31 பேரின் உடல்கள் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.