Spread the love

கடலூர் ஜூன், 14

வருகிற 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் நேற்று மாலை 5 மணி முதல் அதிகாலை வரை அதிகபட்சமாக 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. அதேபோல் மதுரை திருமங்கலம் மாட்டுச்சந்தையில் எட்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *