தேனி ஜூன், 14
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ் இன் கனவு பறிபோனது. அதேபோல் தேனியில் ஓபிஎஸ் ஆதரவுடன் போட்டியிட்ட டிடிவி தினகரன் தோற்றதால் அங்கு அவரது செல்வாக்கும் குறைந்தது. இதனால் அதிமுக மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், அடுத்தக் கட்ட முடிவை தீர்மானிக்கவே இபிஎஸ் தரப்புக்கு அவர் அழைப்பு விடுவதாகவும் சொல்லப்படுகிறது.