சென்னை ஜூன், 12
வரிப்பகர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தேசிய பிரச்சினையாக மாறி உள்ளதாக குற்றம் சாட்டினார். முன்னதாக தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வாக மத்திய அரசு ரூ.5700 கோடியும், உத்தரப்பிரதேசத்திற்கு ₹25,069 கோடியும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.