சென்னை ஜூன், 12
நீட் தேர்வை அரசியலாக வேண்டாம் என தமிழக அரசுக்கு தாமாகா தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்ல அரசாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தியாவை வல்லரசாக மாற்ற மோடி நடவடிக்கை எடுப்பார் என்றார். விக்ரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.