ஆந்திரா ஜூன், 11
ஆந்திர தேர்தலில் மொத்தம் உள்ள 175 இடங்களில் 164 இடங்களை தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்கிறார். துணை முதல்வராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பதவி ஏற்கலாம் என கூறப்படுகிறது. கிருஷ்ணா மாவட்டம் சேகரப்பள்ளி ஐடி பூங்கா மைதானத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.