புதுடெல்லி ஜூன், 11
எக்காரணம் கொண்டும் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் அவர் அளித்த பேட்டியில், என் உடலில் ஓடுவது அதிமுக இரத்தம் இப்படி சொன்ன பிறகும் நான் பாஜகவில் இணைய போவதாக யாராவது பேசுகிறார்கள் என்றால் அவர்கள் சுயநலத்திற்காக சொல்கிறார்கள். எனது அணியில் இருந்து விலகுவோர் இக்கரைக்கு பச்சை என்று சொல்கிறார்கள் என கூறியுள்ளார்.