நியூயார்க் ஜூன், 9
டி20 உலக கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ள நியூயார்க் மைதானம் இந்தியா அணிக்கு சாதகமாக இருக்கும் என செய்தி பரவி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் ரோகித் சர்மா அந்த மைதானத்தை உருவாக்கியவருக்கே அங்கு எப்படி விளையாடுவது என்று தெரியாது என்றும் அப்படி இருக்கையில் இந்திய அணிக்கு எப்படி சாதகமாக இருக்கும் என்றார்.