பாகிஸ்தான் ஜூன், 10
இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் தொடக்க முதலே தடுமாறி வந்தனர். இதனால் 119 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதல்முறையாக ஆல் அவுட் செய்தது பாகிஸ்தான் அணி. அபாரமாக பந்து வீசிய நசீம், ரவூப் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.