சென்னை ஜூன், 8
18-வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இம்மாதம் 15 முதல் 22 வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணி அமைச்சரவை நாளை பதவி ஏற்ற பிறகு மாலை நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. முதல் நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் நிகழ்வும், அவையின் தலைவர் தேர்வும் நடக்கும் அதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் அவையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.