புதுடெல்லி ஜூன், 7
காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று டெல்லி செல்கின்றனர். மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 10 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றனர். இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள மற்றும் சோனியா ராகுலை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக புதிய அமைச்சர்கள் டெல்லிக்கு செல்கின்றனர்.