Spread the love

சென்னை ஜூன், 5

மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் மட்டும் பிரதமர் மோடி எட்டு முறை சுற்றுப்பயணம் செய்தார். குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் சாலை பேரணி போன்ற பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஆனாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறவில்லை. மேலும் பல தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் பாஜகவை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாக புரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *