வாரணாசி ஜூன், 5
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி 1, 52, 513 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம் 2014 மக்களவைத் தேர்தலில் 3, 71, 704 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், 2019 மக்களவைத் தேர்தலில் 4,79,550 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தலில் அவருக்கான வாக்குகள் அதிகரித்த நிலையில் தற்போது கணிசமாக குறைந்துள்ளது.