சிதம்பரம் ஜூன், 5
திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கார்த்திகாயினி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். சிதம்பரம் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.