கோவை ஜூன், 4
தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசையும் பின்னடைவை சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட அந்த இரு தொகுதிகளிலும் திமுக வெற்றி முகத்தில் இருக்கிறது. அண்ணாமலையின் பிறந்த நாளான இன்று வெற்றி பெரிதாக கிடைக்கும் என எதிர்பார்த்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.