ஆந்திரா ஜூன், 4
சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட அமைச்சர் ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரை விட 27 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி பீடத்தில் அமைந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் இந்த முறை 15 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று ஆட்சியை இழந்துள்ளது.