சென்னை மே, 28
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினி அவரது நண்பராக சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜை சங்கர் அனுகியதாகவும், ஆனால் நடிக்க மறுத்து விட்டதாகவும் அதே நேரத்தில் தற்போது லோகேஷ் இயக்கம் கூலி படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.