சென்னை மே, 27
கங்குவா படத்தை அடுத்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சூர்யா ரெட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் விரைவில் படத்தின் டீசர் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.