சென்னை மே, 27
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக, தி ஹிந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நடப்பு தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யவும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மாற்றவும் அவர் முடிவு செய்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.