ஜார்க்கண்ட் மே, 27
ஜார்கண்டின் தார்பா தொகுதிக்குட்பட்ட துண்டி கிராமத்தில் 40 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தலின் ஆறாம் கட்ட வாக்கு பதிவு ஒரு பகுதியாக நக்செல்கள் ஆதிக்கம் நிறைந்த துண்டி கிராமத்தில் 1984 ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் ஒரு சதவீத வாக்குகள் கூட பதிவானதில்லை. இந்நிலையில் மக்கள் வாக்குச்சாவடிக்கு ஆர்வமாக வந்து ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர்.