நெல்லை மே, 27
நெல்லையருகே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 4-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 32 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் இன்று மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.