நியூயார்க் மே, 25
உலகக்கோப்பை பயிற்சியை தொடங்குவதற்காக இந்திய அணி இன்று நியூயார்க் செல்ல இருக்கிறது. முதல் கட்டமாக ரோஹித், கோலி, பும்ரா பண்ட் ஆகியோர் இரவு 10 மணியளவில் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ளதாகவும், ஜெய்ஸ்வால், சாம்சன், சஹல் ரிங்கு சிங் ஆகியோர் இரண்டாம் கட்டமாக நாளை புறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாண்டியா ஏற்கனவே லண்டனில் உள்ளதால், அவரும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது