நெல்லை மே, 19
மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேயிலை தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் தேயிலைத் தோட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் கூறிய அவர், தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு தோட்டங்களை தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரை பார்க்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.