உத்தரப் பிரதேசம் மே, 20
உத்தரபிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற ஃபருக்காபாத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார். தேர்தல் ஆணையம் இது குறித்து முடிவு எடுக்க உள்ளது முன்னதாக 8 வாக்குகள் பதிவு செய்த அச்சிறுவன் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் அணில் சிங் தாக்கூரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.