சென்னை மே, 20
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் 2026 இல் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால் தற்போதைய கட்சியை வலுப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைகுரிய இளைஞரணி மாவட்ட செயலாளர் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.