லக்னோ மே, 18
நாடு முழுவதும் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் ஆறு மாவட்டங்களில் 49 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி, ஸ்மிருதி ராணி, ராஜ்நாத் சிங், பியூல் கோயல், உமர் அப்துல்லா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.