கேரளா மே, 16
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டிய பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்காத மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் மே 19ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.