ஆந்திரா மே, 13
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSRCP, அவரது சகோதரி ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ், தெலுங்கு- தேசம்-பாரதிய ஜனதா கட்சி- ஜனசேனா கூட்டணி என மூன்று அணிகள் இந்த தேர்தலில் களம் இறங்குகின்றன. மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.