புதுடெல்லி மே, 11
தலைநகர் டெல்லியில் வீசிய புழுதிப் புயல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கோடை வெயில் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசி வருகிறது. கடுமையான காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வெளிய வர வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.