புதுக்கோட்டை ஏப்ரல், 27
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம். கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.