சென்னை ஏப்ரல், 18
மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும் வாக்கை பெற்று பூர்த்தி செய்து அளிக்க முடியாது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தபால் வாக்கை செலுத்த விண்ணப்பங்களை அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.