பொள்ளாச்சி ஏப்ரல், 16
கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கமல், டெல்லியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆணிப்படுக்கை போட்டு வரவேற்றது. ஆனால் முதல்வராக இருந்த போது உழவர் சந்தைகள் அமைத்த கலைஞர் ரூ.7,000 கோடிக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தவரென புகழாரம் சூட்டியுள்ளார்.