மும்பை ஏப்ரல், 16
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு வளர்ச்சி பாதையில் பயணிக்க வைக்கும் தொலைநோக்குப் பார்வையில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பாமகவின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சிக்கின்றன என கூறினார்.