நெல்லை ஏப்ரல், 16
பிரதமர் மோடிக்கு யானை சிலையை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பரிசாக அளித்தனர். நெல்லை மாவட்டத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சரத்குமார் அவரது மனைவியும் விருதுநகர் வேட்பாளருமான ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் யானை சிலையை பரிசாக வழங்கினர். மேலும் அவர் வெள்ளையரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், முத்துராமலிங்க தேவர் ஆகியோர் துணிச்சலாக போராடியதாகவும், அது போல நமது நாட்டின் எதிரிகளுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி போராடுகிறது என்று குறிப்பிட்டார்.