சென்னை ஏப்ரல், 16
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக வந்து பூத் ஸ்லிப் பிநியோகம் செய்யப்படுகிறது. ஒருவேளை அதை வாங்க முடியவில்லை என்றால் ஓட்டர் ஹெல்ப்லைன் என்ற மொபைல் செயலியில் பூத் ஸ்லிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.