புதுடெல்லி ஏப்ரல், 13
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் +2 கல்வி தகுதி கொண்ட குரூப் சி பணிகளுக்கான போட்டி தேர்வு ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெறும் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மே 7ம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மண்டலத்தில் கணினி வழி தேர்வு ஜூன் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களை www.ssc.govt.in இணையதளத்தில் அறியலாம்.