லக்னோ ஏப்ரல், 13
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபாரமாக பந்து வீசிய அவர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மார்க்கஸ், ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரான் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிஎஸ்கே, கேகேஆர்,எம் ஐ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்காது அவர் அணிக்கு திரும்பியவுடன் வெற்றியைத் தேடி தந்துள்ளார்.