சென்னை ஏப்ரல், 13
நடிகர் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆன அருள்மணி மறைவிற்கு ஈபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி மீதும் கட்சி தலைமை மீதும் விசுவாசம் கொண்டு கட்சி கொள்கைகளை பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தவர் அருள்மணி. அவரது மறைவு அதிமுகவிற்கு பெரும் இழப்பு. அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.