சென்னை ஏப்ரல், 12
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது ஓபிஎஸ்சும் அவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கட்சிக்கு எதிராக ஓபிஎஸ்சின் சில செயல்பாடுகள் இருந்ததாகவும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நிர்வாகிகள் கருதியதே பிரிந்ததற்கு காரணம் என்றும் பதிலளித்தார்.