புதுடெல்லி ஏப்ரல், 11
கேண்டிடேட்ஸ் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவுக்கு எதிரான போட்டியில் பிரக்யானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். சிறு தவறு கூட செய்யாமல் கவனமுடன் விளையாடிய அவர் 45 வது நகர்த்தலால் நிஜாத்தை வீழ்த்தினார். இதனால் 3.5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.