சென்னை ஏப்ரல், 9
வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுகவிற்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்த வருகின்றன. அந்த வகையில் முதல்வரை சந்தித்த விக்கிரமராஜா தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்ததற்காக நன்றி கூறி, I.N.D.I.A கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்தார்.